குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்
மு.வ விளக்க உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
A1 Tax Club
BY APPOINTMENT ONLY! Special Offer:
BOOKED NOW to chance to get FREE. Limited Time Only. CALL NOW. Regular $49.99 per person. Students,Seniors FREE.
Now Only 50% off and Spouse get FREE when house head filing personal tax.
குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று
மு.வ விளக்க உரை:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
குறள் 1317:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று
மு.வ விளக்க உரை:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்
மு.வ விளக்க உரை:
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
குறள் 1314:
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று
மு.வ விளக்க உரை:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று
மு.வ விளக்க உரை:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து
மு.வ விளக்க உரை:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு
மு.வ விளக்க உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
குறள் 1309:
நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது
மு.வ விளக்க உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
குறள் 1307:
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று
மு.வ விளக்க உரை:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
குறள் 1306:
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று
மு.வ விளக்க உரை:
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
10/12/2024
Com in my soon!
For more info at 647-289-0091
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
2 Northside Road
Markham, ON
L6E1Z5
Opening Hours
| Monday | 9am - 8pm |
| Tuesday | 9am - 8pm |
| Wednesday | 9am - 8pm |
| Thursday | 9am - 8pm |
| Friday | 9am - 8pm |
| Saturday | 9am - 9pm |
| Sunday | 9am - 9pm |